✕
2023, டிசம்பர் 19 முதல் டிசம்பர் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
வருமானம் சுமாராக இருக்கும். கையில் பணம், தனம் இருக்கும். எதிர்பாராத தெய்வ தரிசனம் அமையும். குழந்தைகளால் மகிழ்ச்சி, நற்பலன்கள் கிடைக்கும். முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றிபெறும். எதிர்பாராத செய்திகள் மகிழ்ச்சியை கொடுக்கும். யாரை நம்புகிறீர்களோ அவர்களுடைய உதவி கிடைக்கும். யாரை தொடர்புகொள்ள நினைக்கிறீர்களோ அவர்களை நேரடியாக தொடர்புகொண்டால் காரியங்கள் நல்லவிதமாக நடக்கும். புது காதல் மலரும். கணவன் - மனைவியிடையே சிறுசிறு சண்டைகள் இருக்கும். வேலையில் எதிர்பார்த்த வருமானம் கிடைக்கும். நீண்ட ஸ்தல யாத்திரைகள் போகும் சூழ்நிலைகள் அமையும். மகாலட்சுமி, நரசிம்மர் வழிபாடு செய்தால் சிறப்பாக இருக்கும்.

ராணி
Next Story