2024 ஜனவரி 30 முதல் பிப்ரவரி 5-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுக்கு வெற்றி நிச்சயம். வேலையை பொறுத்தவரை, நீங்கள் நினைப்பது நடக்கும். கடன் கிடைக்கும். எதிரிகளிடம் தோல்வியை சந்திப்பீர்கள். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு பரவாயில்லை. வருமானங்கள், சம்பாதியங்கள் இருந்து கொண்டே இருக்கும். எதிர்பாராத சுற்றுலா பயணம் மேற்கொள்வீர்கள். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு சுமாரான லாபம் கிடைக்கும். சொந்த தொழிலில் இருப்பவர்களுக்கு பரவாயில்லை. இரண்டாம் திருமணம் செய்யலாம். குழந்தைகளால் மகிழ்ச்சி, பிரச்சினை இரண்டுமே வரும். நண்பர்களை பிரிவீர்கள். துர்க்கை, காளி மற்றும் சித்தர்களின் சமாதிக்கு சென்று வழிபாடு செய்து வந்தால் நன்மை உண்டாகும்.

Updated On 29 Jan 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story