2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கடந்த வாரத்தை போன்றே இந்த வாரமும் நிறைய பிரச்சினைகளை, போராட்டங்களை சந்திப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. மிகப்பெரிய ஆறுதல் என்னவென்றால் இவை அனைத்திலும் இருந்து மீண்டு வந்துவிடுவீர்கள். காரணம் குரு 8-ஆம் இடத்தில் இருந்து 9-ஆம் இடத்திற்கு வந்திருப்பதால் நல்லதொரு தெய்வ அனுகூலத்தை கொடுப்பார். நீங்கள் எந்த வேலையில் இருந்தாலும் ஒரு திருப்தி இல்லாத மனநிலை இருந்துகொண்டே இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த நல்ல விற்பனை மற்றும் லாபம் இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் அமையும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. இருந்தும் யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். கடன் வாங்காதீர்கள். யாருக்கும் ஜாமின் கையெழுத்து போடாதீர்கள். தேவையில்லாத வாக்குகளை கொடுத்துவிட்டு மாட்டிக்கொள்ளாதீர்கள். இவ்வளவு பிரச்சினைகள் இருப்பதால் கவனமாக இருங்கள். ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி, ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடுகள் செய்ய வேண்டாம். லாபம் இருக்காது. சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வீர்கள். அதனால் நற்பலன்கள் கிடைக்கும். வேலையில் எந்த ஒரு பிரச்சினையும் இல்லை. ஏதோவொரு வருமானம், முன்னேற்றம் இருந்துகொண்டே இருக்கும். இந்த வாரம் துர்க்கையை வழிபாடு செய்யுங்கள். வாய்ப்பிருக்கும் பட்சத்தில் சித்தர்களுடைய ஜீவ சமாதி சென்று வாருங்கள்.

Updated On 25 March 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story