2023, டிசம்பர் 5 முதல் டிசம்பர் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

அனைத்திலும் திருப்தி இல்லாமல் இருப்பீர்கள். சமூக நடவடிக்கைகள் கூடும். சமுதாயத்தில் பெயர், புகழ், அந்தஸ்து அதிகரிக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்லதொரு முன்னேற்றம் உண்டு. ஆரம்பத்தில் முயற்சிகளுக்கு தடை ஏற்பட்டாலும் இறுதியில் வெற்றியே கிட்டும். இளைய சகோதர, சகோதரிகளால் நற்பலன்கள் உண்டு. தேவையற்ற செலவுகளை செய்யும்படியான சூழல் ஏற்படும். எதிர்பாராத பொழுதுபோக்குகள் மற்றும் சுற்றுலாக்களுக்காக செலவு செய்யவேண்டி இருக்கும். வேலையில் கவனம் செலுத்துங்கள். உடன் பணிபுரிபவர்களிடம் கவனமாக இருங்கள். உயர் அதிகாரிகளிடம் பொறுமையாகவும், மரியாதையாகவும் நடந்துகொள்ளுங்கள். அரசு சார்ந்த விஷயங்களில் கவனம் தேவை. யாருக்கும் கடன் கொடுக்கவேண்டாம். ஜாமீன் கையெழுத்திட வேண்டாம்.

Updated On 6 Dec 2023 6:17 AM GMT
ராணி

ராணி

Next Story