2024 பிப்ரவரி 13 முதல் பிப்ரவரி 19-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில் சுமாராக இருக்கும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. அரசு மற்றும் தனியார் என எதில் வேலை பார்ப்பவர்களாக இருந்தாலும் உங்கள் உடல் உழைப்பு சார்ந்த வேலையில் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் உண்டு. ஷேர் மார்க்கெட், லாட்டரி போன்ற ஏதாவது ஒன்றில் இன்வெஸ்ட்மென்ட் செய்வது, டிஜிட்டல் கரன்சி, கோல்ட் பாண்ட் வாங்குவது உள்ளிட்டவற்றில் ஓரளவு ப்ராஃபிட் இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி கிடைக்கும். அரசியல் சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு நல்ல ஏற்றம், முன்னேற்றம் இருக்கும். புதிய காதல் மலரும். அதனால் மகிழ்ச்சி உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள் மற்றும் குழந்தைகளால் நன்மை ஏற்படும். எதிர்பாராத பயணம், ஆலய தரிசனம் ஏற்படும். வங்கி கடனுக்கு விண்ணப்பித்திருந்தால் அவை எளிதில் கிடைக்கும். உங்கள் இஷ்ட தெய்வத்துடன், துர்க்கையையும், காளியையும் வழிபடுவது நல்லது.

Updated On 13 Feb 2024 12:00 AM IST
ராணி

ராணி

Next Story