2024 பிப்ரவரி 27 முதல் மார்ச் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களை அறியாத தைரியம், தன்னம்பிக்கை கூடும். எதையும் துணிந்து செய்யலாமா? என்கிற எண்ணம், சிந்தனைகள் செயலாக்கம் பெரும். மனக்குழப்பங்கள் ஏற்படும் போதெல்லாம் அதை யாராவது தீர்த்து வைப்பார்கள். ஆனாலும் திருப்தியற்ற மனநிலையில்தான் நீங்கள் இருப்பீர்கள். ஆகையால் இந்த வாரத்தை பொறுத்தவரையில் நீங்கள் மிகவும் கவனமாக இருப்பது நல்லது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, உற்பத்திக்கு தகுந்த விற்பனை இருக்கும். நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருக்கும் வீடு விற்றுப்போகும். வீடு, இடம் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான மாற்றங்கள் ஏற்படும். புதிய காதல் கைகூடும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றி பெரும். தேவை இருந்தால் தவிர கடன் வாங்காதீர்கள். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் போன்ற எதிலும் முதலீடுகள் செய்யாதீர்கள். விட்டதை பிடிக்க ஆசைப்பட வேண்டாம். நோய் எதிர்ப்பு சக்தி உங்களுக்கு குறைவாக இருக்கும். அதனால் எதிர்ப்பு சக்தியை கூட்டுவது முக்கியம். துர்க்கை மற்றும் ஆஞ்சநேயரை வழிபட்டால் ஏற்றம் பெறுவீர்கள்.

Updated On 27 Feb 2024 5:45 AM GMT
ராணி

ராணி

Next Story