2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எத்தனை பிரச்சினைகள் இருந்தாலும் அதில் இருந்து மீண்டு வருவதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது. சொந்த தொழில் தொடங்குவதற்கான வாய்ப்புகள் உருவாகும். உங்கள் காதல் வெற்றியடையும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி கிடைக்கும். வருமானம் இல்லை. ஷேர் மார்க்கெட், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்யும் போது மிகவும் கவனமாக இருங்கள். வேலையில் எப்போதும் பிரச்சினைகள் இருக்கும். அதனால் பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். செய்யும் வேலையை முழு மனதோடு செய்யுங்கள். அப்பா மற்றும் உங்களது உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உயர்கல்வியிலும் சின்ன சின்ன தடைகள் இருக்கும். அலுவலகம் மாற நினைப்பவர்களும் பொறுமையாக இருப்பது நல்லது. பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் வருவதில் தாமதம் ஏற்படும். வருமானம் இருந்தாலும் அதற்கேற்ற செலவினங்களும் இருக்கும். கணவன் - மனைவிக்கிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் இருந்துகொண்டே இருக்கும். சிவன் மற்றும் மகாலட்சுமியை வழிபடுவது சிறந்தது.

Updated On 5 March 2024 2:38 AM GMT
ராணி

ராணி

Next Story