2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் மிகவும் கவனமாக இருக்க வேண்டும். நோய் எதிர்ப்பு சக்தி குறையும். வழக்குகள் அதிகரிப்பதற்கான வாய்ப்பு, கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை, வட்டி கட்ட வேண்டிய காலகட்டங்கள் இருக்கிறது. கணவன் - மனைவி உறவு மகிழ்ச்சிகரமானதாக இல்லை. சொந்த தொழில் பரவாயில்லை. வருமானங்கள் சுமார். வேலையும் சுமாராக உள்ளதால் உடன் பணியாற்றுபவர்களிடமும், மேல் அதிகாரிகளிடமும் அனுசரித்து செல்வது நல்லது. ஷேர் மார்க்கெட் உள்ளிட்ட எதிலும் முதலீடுகள் செய்ய வேண்டாம். அடக்கி வாசிப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. அரசியலில் இருப்பவர்களுக்கு கவனம் தேவை. எதிரிகளால் பிரச்சினை, அசிங்கம், அவமானங்கள் போன்றவை இருந்துகொண்டே இருக்கிறது. காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் இல்லை. விவசாயத்தில் நல்லதொரு மகசூல், லாபம் உள்ளது. சிவ தலத்தில் இருக்கக்கூடிய சண்டிகேஸ்வரர் மற்றும் பெருமாள் தலத்தில் இருக்கக்கூடிய நரசிம்மரை வழிபடுவது நல்லது.

Updated On 18 March 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story