2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் எல்லாவற்றிலும் கவனம் செலுத்துங்கள். குறிப்பாக அடக்கி வாசிப்பது நல்லது. யாரிடம் பேசுவதாக இருந்தாலும் யோசித்து, நிதானமாக செயல்படுங்கள். முக்கியமாக யாருக்கும் கவுண்டர் கொடுக்காதீர்கள். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவிக்கிடையே சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள் ஏற்படும். சொந்த தொழில் ஓரளவுக்கு பரவாயில்லாமல் இருக்கும். பாஸ்போர்ட், விசாவிற்கு விண்ணப்பித்திருந்தால் அவை வருவதில் தடைகள் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. உடன் பணியாற்றுபவர்கள் உதவி புரிவார்கள். உயர் அதிகாரியால் நிறைய பிரச்சினைகள், மனவருத்தங்கள், போராட்டங்கள் இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த விற்பனை இருக்கிறது. ஆனால் லாபம் இல்லை. அம்மாவின் உடல் ஆரோக்கியம் மற்றும் கல்வியில் கவனம் செலுத்துங்கள். ஷேர் மார்க்கெட், டிரேடிங் போன்ற எதில் முதலீடு செய்ய நினைத்தாலும் அடக்கி வாசியுங்கள். குழந்தைகளை பிரிந்து இருப்பீர்கள். அவர்களுக்காக நிறைய செலவு செய்வீர்கள். அரசியல் வாழ்க்கையில் இருப்பவர்கள் கவனமாக இருக்க வேண்டும். எதிரிகளால் தேவையற்ற பிரச்சினைகள், போராட்டங்கள் உண்டு. உங்கள் தொழிலில் தகராறு, தொழில் நிச்சயமற்ற தன்மை இருக்கும். இந்த வாரம் கிரக நிலைகள் சரியில்லாததால் உங்களது இஷ்ட தெய்வத்தை வழிபடுங்கள்.

Updated On 8 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story