2024 ஏப்ரல் 16-ஆம் தேதி முதல் ஏப்ரல் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

சொந்த தொழில் பரவாயில்லை. மணவாழ்க்கையை பொறுத்தவரை நன்றாக உள்ளது. யார் மீதாவது காதல் ஆசை இருந்தால் அந்த காதல் வெற்றி பெரும். முறிந்த காதல் மீண்டும் சேர்வதில் சிக்கல் உள்ளது. வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்களோடு பணியாற்றும் சக ஊழியர்கள் மற்றும் உயர் அதிகாரிகளால் பிரச்சினை இருந்துகொண்டே இருக்கும். அதனால் பொறுமையாக இருங்கள். மேலும் கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். அது திரும்பி வர வாய்ப்பில்லை. உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு ஓரளவு முன்னேற்றம் இருக்கிறது. அரசியல் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஏற்றம், முன்னேற்றம் உண்டு. புதிய முயற்சிகள் ஏதும் மேற்கொள்ள வேண்டாம். உறவினர்களால், சுற்றியிருப்பவர்களால் நிம்மதியற்ற சூழ்நிலை உள்ளது. வேலையில் டென்ஷன், மன அழுத்தங்கள் அதிகமாக இருக்கும். இந்த வாரம் முழுவதும் மகாலட்சுமி மற்றும் சிவ தலங்களில் உள்ள அம்பாளை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 15 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story