2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இயற்கையாகவே தெய்வ அனுகூலம் கிடைக்கும். நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள நினைப்பவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபடலாம். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். லவ் பிரேக் அப் ஆகியிருந்தால் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. சொந்த தொழில் சுமாராக இருக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், டிஜிட்டல் கரன்சி, மியூச்சுவல் பண்ட் போன்றவற்றில் முதலீடு செய்தால் கவனமாகவும், பொறுமையாகவும் இருங்கள். லாபம் வருவது போல் இருக்கும். ஆனால், சுமாராகத்தான் இருக்கும். இந்த வாரம் கடன் குறைய வாய்ப்புள்ளது. எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் ஏற்படும். குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் மட்டுமின்றி அவர்களால் நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகளில் ஆரம்பத்தில் தடைகள் இருந்தாலும், இறுதியாக வெற்றிகள் கிடைக்கும். முடிந்தவரை கடன் வாங்காதீர்கள். எது எப்படி இருந்தாலும் அப்பாவின் அன்பு, ஆதரவு கிடைக்கும். அதனால் நற்பலன்கள் ஏற்படும். வாரம் முழுவதும் மகாலட்சுமி வழிபாடு, சிவன் தரிசனம் செய்யுங்கள் நல்லது நடக்கும்.

Updated On 29 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story