2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களுடைய ராசிநாதன் தெய்வீக ஸ்தானத்தில் உள்ளதால் எதிர்பாராத தெய்வ தரிசனம், ஆலய தரிசனம் உண்டு. நீண்ட தூரம் பயணம் மேற்கொள்ள முயற்சிப்பீர்கள். இரண்டாம் திருமணத்திற்கு வாய்ப்புகள் உள்ளன. அப்பாவின் அன்பு, ஆதரவு முழுமையாக கிடைக்கும். வேறு அலுவலகம் மாற, பேப்பர் போட வேண்டும் என நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உள்ளன. வெளிநாடு செல்ல நினைப்பவர்கள் அதற்காக முயற்சிக்கலாம். உங்கள் காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. பிரிந்த காதல் சேரும். குடும்பத்தில் சுப காரியங்கள், சுப நிகழ்ச்சிகள் தடைபட்டிருந்தால் தற்போது நடக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு இறையருளால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். கிரக நிலைகள் சரியில்லாததால், விட்டதை பிடிக்க ஆசைப்பட்டு ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், டிஜிட்டல் கரன்சி போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். வேலையை பொறுத்தவரை பரவாயில்லை. உடன் பணியாற்றுபவர்களால் நற்பலன்கள் உண்டு. சொந்த தொழிலும் பரவாயில்லை. இந்த வாரம் முழுவதும் முருகன் மற்றும் துர்க்கையை தொடர்ந்து வழிபட்டு வாருங்கள்.

Updated On 6 May 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story