2024 மே 14-ஆம் தேதி முதல் மே 20-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்களின் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு, கீர்த்தி அனைத்தும் காப்பாற்றப்படும். உங்கள் நண்பர்கள் யாராக இருந்தாலும் அவர்களின் நட்பை தொடருங்கள். இல்லையென்றால் உங்களின் நெருங்கிய நண்பர்களை பிரிய நேரிடும். பொருளாதார நிலை நன்றாக உள்ளது. வருமானங்கள் இருந்து கொண்டே இருக்கும். உங்களின் முயற்சிகள் ஓரளவு வெற்றியடையும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள், எதிர்பாராத செய்திகள் உங்களுக்கு சாதகமாக வந்து சேரும். வீடு, இடம், ஊர் மாற நினைப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும். எதிர்பாராத பயணத்தால் மகிழ்ச்சி இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை, லாபம் இருக்கிறது. காதல் விஷயங்களில் நிறைய பிரச்சினைகள், போராட்டங்கள் இருக்கின்றன. வேலை நிமித்தமான இடமாற்றம் உண்டு. தேவையில்லாமல் கடன் வாங்காதீர்கள். அப்பாவுடைய அன்பு, ஆதரவு கிடைக்கும். புதிய தொழில் தொடங்குவதற்கான சூழல்கள் நிறைய உள்ளன. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. ஷேர், டிரேடிங், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு பரவாயில்லை. இந்த வாரம் முருகன் மற்றும் துர்கையை வழிபாடு செய்யுங்கள் ஏற்றம் கிடைக்கும்.

Updated On 14 May 2024 4:50 AM GMT
ராணி

ராணி

Next Story