2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

அரசாங்கத்தால் ஆக வேண்டிய காரியங்கள் நடக்கும். உங்களின் கௌரவம், புகழ், செல்வம், செல்வாக்கு கூடும். நெருங்கிய நண்பர்களை பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம், பொருள் இருக்கும். உங்கள் முயற்சிகள் ஏதோவொரு ரூபத்தில் வெற்றியடையும். நினைப்பது நடக்கும். செய்ய நினைப்பதை துணிந்து செயல்படுத்துவீர்கள். அதனால் உங்களுக்கு நன்மைகள் உண்டு. உங்களை நீங்களே மெருகேற்றிக்கொள்வீர்கள். வீடு, இடம் மாறுவதற்கான சூழ்நிலைகள் உள்ளன. விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாக வாய்ப்புள்ளது. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சிக்கலாம். வெளிநாட்டு பயணத்தால் நன்மைகள் ஏற்படும். அப்பாவால் ஆக வேண்டிய காரியங்கள் அனைத்துக்கும் வாய்ப்புகள் உள்ளன. வேலையை பொருத்தவரை பரவாயில்லை. தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. அதேநேரம், வேலையில் உங்களுக்கான முன்னேற்றம் கண்டிப்பாக இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். நல்லதொரு ரிட்டன்ஸ் கிடைக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். இந்த வாரம் துர்க்கை மற்றும் சிவனை தரிசனம் செய்து வாருங்கள், முன்னேற்றம் ஏற்படும்.

Updated On 3 Jun 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story