2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஆசைகள் பூர்த்தியாகும். நினைப்பது நடக்கும். அப்பாவால் நன்மைகள், மகிழ்ச்சி சந்தோஷம் இருக்கிறது. பொருளாதார நிலைகள் நன்றாக இருக்கிறது. கையில் பணம், தனம் இருக்கும் என்பதால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யலாம். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் அனைத்தும் தெய்வ அனுகூலத்தில் வெற்றி பெறும். இன்டெர்வியூவில் தேர்வு ஆவீர்கள். போட்டித்தேர்வுகளில் வெற்றி பெறுவீர்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி, பப்ளிசிட்டி இருக்கிறது. ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் உள்ளிட்டவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் சுமாரான முதலீடே செய்யுங்கள். எதிர்காலத்தில் நல்ல லாபம் கிடைக்கும். உங்களின் முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றிபெறும். உங்களை நீங்களே புதுப்பித்துக் கொள்வீர்கள். எதிர்பாராத பயணத்தால் மகிழ்ச்சி உள்ளது. இளைய சகோதர - சகோதரிகளால் நன்மைகள் உண்டு. நீங்கள் எடுக்கும் முயற்சிகளுக்கு ஏற்ப உங்கள் வாழ்க்கையில் மிகப்பெரிய மாற்றம், முன்னேற்றம் உண்டு. எதிரிகளை ஜெயிப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. நல்ல வேலையாட்களை எதிர்பார்த்து காத்திருந்தால் அமைவார்கள். திருமண வாழ்க்கை திருப்தியாக இருக்காது. கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள் உண்டு. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகரையும், துர்கையையும் தரிசனம் செய்யுங்கள்.

Updated On 10 Jun 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story