2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

கிரக நிலைகள் சுமாராக இருப்பதால் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். தேவையில்லாமல் யாரையும் நம்ப வேண்டாம். தொடர்பு கொள்ள நினைப்பவர்களை நேரடியாக தொடர்பு கொள்ளுங்கள். எந்த காரணத்திற்காகவும் இடைத்தரகர்களை வைத்துக்கொள்ளாதீர்கள். பொருளாதார நிலைகளை பொறுத்தவரை வருமானங்கள் உண்டு. அதற்கேற்ற செலவினங்களும் இருக்கிறது. முதலீடு செய்யும் யோசனை இருந்தால் பெரிய அளவில் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். வேலையை பொறுத்தவரை நன்றாக இருந்தாலும், தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. அதேநேரம் நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கிறது. போட்டித் தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். குழந்தைகளால் நிம்மதியற்ற சூழல், பிரச்சினைகள், தேவையற்ற மன வருத்தங்கள், அவர்களுக்காக செலவு செய்ய வேண்டிய காலங்கள் அனைத்தும் இருக்கிறது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பாப்புலாரிட்டி இருக்கிறது. அரசியல் வாழ்க்கையை பொறுத்தவரை இந்த வாரம் சிறப்பாக இருக்கிறது. இருந்தாலும் கொஞ்சம் கவனமாக செயல்படுங்கள். கூடியவரை இந்த வாரத்தில் எல்லாவற்றிலும் இருந்தும் கொஞ்சம் ஒதுங்கியே இருங்கள். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலித்தால் நிறைய பிரச்சினைகள் இருக்கிறது. லவ் பிரேக் அப் ஏற்படுவதற்கான வாய்ப்புண்டு. வாரம் முழுவதும் துர்கை மற்றும் காளியை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 1 July 2024 6:40 PM GMT
ராணி

ராணி

Next Story