2024 ஜூலை 02-ஆம் தேதி முதல் ஜூலை 08-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்களின் கௌரவம், அந்தஸ்து, பெயர், புகழ் கூடும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. கையில் பணம், தனம் இருக்கும். சொந்த தொழில் நன்றாக இருக்கும் கூட்டுத்தொழிலில் இருவரும் லாபம் அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலும் நன்றாக உள்ளது. நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றியடையும். இளைய சகோதர - சகோதரிகளால், நெருங்கிய உறவுகளால் நற்பலன்கள் உண்டு. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. உங்களின் எண்ணங்கள் செயலாக்கம் பெரும். விற்பனையாகாத சொத்துக்கள் நல்ல விலைக்கு விற்பனையாகும் அல்லது அது தொடர்பான பேச்சுவார்த்தைகள், அக்ரிமெண்ட் போடுவதற்கான சூழ்நிலைகள் இருக்கிறது. உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த நல்ல விற்பனை இருக்கிறது. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கும் ஏற்றம், முன்னேற்றம் உண்டு. வேலை பரவாயில்லை. வழக்குகளில் ஜெயிப்பீர்கள். நல்ல வேலையாட்கள் அமைவார்கள். கேட்ட இடத்தில் கடன் கிடைக்கும். போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் வெற்றி பெறுவீர்கள். புதிய காதல் மலரும். இரண்டாம் திருமணம் நடைபெறும். ஒன்றிற்கும் மேற்பட்ட தொழில் செய்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். இந்த வாரம் முழுவதும் துர்க்கை மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 2 July 2024 9:11 AM GMT
ராணி

ராணி

Next Story