2023, அக்டோபர் 17 முதல் அக்டோபர் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்.

ஒருமாத காலத்திற்கு நேரடியாக சில விஷயங்களில் ஈடுபடாமல் இருப்பது நல்லது. ஏனெனில் முயற்சிகள் வெற்றிபெறாது. குடும்பத்துடன் ஆலோசித்து முடிவெடுப்பது சாதகமான சூழலை ஏற்படுத்திக் கொடுக்கும். தாய் மீது அக்கறை கொள்வீர்கள். வீடு, மனை, வாகனம் மற்றும் கொடுக்கல் வாங்கலில் ஈடுபாடு இருக்கும். மேல் அதிகாரிகளிடம் அளவோடு நடந்துகொள்ளுங்கள். தந்தையிடம் கவனமாக பேசுவது நல்லது. இறை வழிபாடு, தீர்த்த யாத்திரை நல்ல பலன் கொடுக்கும். 17, 18 தேதிகளில் முயற்சிகள் வெற்றிபெறும். 19, 20, 21 தேதிகளில் கவனம் தேவை. 22, 23 தேதிகளில் சாதகமான பலன்கள் கிட்டும்.


Updated On 17 Oct 2023 12:01 AM IST
ராணி

ராணி

Next Story