2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
உங்கள் ராசிநாதன் சூரியன் 12ஆம் இடத்தில் சனி பகவானின் நட்சத்திரத்தில் இருப்பதால், இந்த வாரம் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். தேவையற்ற விஷயங்களில் தலையிடாதீர்கள். குறிப்பாக அரசு சம்பந்தப்பட்ட விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், திரும்பி வர வாய்ப்பில்லை. பொருளாதார நிலைமை பெரிய அளவில் சிறப்பாக இல்லை. எவ்வளவு சம்பாதித்தாலும் அதற்கு மேல் செலவுகள் ஏற்பட வாய்ப்புள்ளது. புதிய முயற்சிகளை மேற்கொள்ளாமல், வழக்கமான பணிகளில் கவனம் செலுத்துங்கள். உறவுகளால் நன்மையும், மன வருத்தங்களும் கலந்திருக்கும். கல்விக்கு இந்த வாரம் சிறந்ததாகும். வெளிநாடு சென்று படிக்க விரும்புபவர்களுக்கு வாய்ப்புகள் உண்டு. வேலையில் கவனம் தேவை. சனி எட்டாம் இடத்தில் இருப்பதால் வேலையில் தடை அல்லது போராட்டம் இருக்கும். வேலையில் திருப்தியின்மை ஏற்படும். வேலையை விட்டு வெளியேற அல்லது வெளியேற்றப்பட வாய்ப்புள்ளது. உங்கள் உழைப்பால் மற்றவர்கள் பெயர் எடுப்பார்கள். பதவி உயர்வு, ஊதிய உயர்வு பற்றி கவலைப்பட வேண்டாம். தொழில் சுமாராகவே இருக்கும், லாபம் குறைவு. பைரவரையும், ஆஞ்சநேயரையும் வழிபடுங்கள்.
