2025 ஜூலை 29-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 04-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
ராசிநாதன் சூரியன் 12-ம் இடத்தில் இருப்பதால், இந்த வாரம் எடுக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வைக்கவும். கிரகங்கள் சாதகமாக இருப்பது போலத் தோன்றினாலும், நிலைமை சுமார். இந்த வாரம் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருப்பதால், உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. தொழில் சுமாராக இருக்கும்; பெரிய முதலீடுகளைத் தவிர்க்கவும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்குப் பலனளிக்கும், உங்களுடைய பணம் முடங்க வாய்ப்பு உண்டு. பணவரவு தாமதமாகலாம். ராசியில் கேது இருப்பதால், வெற்றி பெறுவது போல் தோன்றினாலும், நிறைய போராட்டங்கள் இருக்கும். வேலைவாய்ப்புகளில் மிகவும் கவனமாக இருங்கள்; வேலை இழப்பு அல்லது வெளியேற்றப்படுதலுக்கான வாய்ப்புகள் உண்டு. இந்த வாரம் வியாபாரமும், வேலையும் சாதாரணமாக இருப்பதால், அடக்கி வாசியுங்கள். 2-ம் இடத்தில் செவ்வாய், சனி பார்ப்பதால் புதிய காதல் உறவுகள் மலர வாய்ப்பு உண்டு. பங்குச்சந்தை, வர்த்தகம், ஆன்லைன் வியாபாரம் போன்றவற்றில் சாதாரண முதலீடுகளைச் செய்யுங்கள், நல்ல லாபம் கிடைக்கும். அனைத்து வகையான யூக வணிகங்களும் இந்த வாரம் லாபத்தை அளிக்கும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும் வாய்ப்பு உண்டு. குழந்தைகளால் நன்மையும், மகிழ்ச்சியும் உண்டாகும். இந்த வாரம் பெருமாளையும், சிவனையும் வழிபடுவது அவசியம்.
