2025 ஆகஸ்ட் 26-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் ராசிநாதன் சூரியன் 12-ம் வீட்டில் இருப்பதால், வருமானத்திற்கு இணையாக செலவுகளும் இருக்கும். ஏழாம் வீட்டில் ராகு, எட்டாம் வீட்டில் சனி இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தி குறையும். வியாபாரத்தில் லாபம் வருவது போல தோன்றும், ஆனால் லாபம் கைக்கு வருவதில் தாமதம் ஏற்படும். நீங்கள் உழைத்தாலும், மற்றவர்களுக்கே லாபம் கிடைக்கும். புதிய காதல் உறவுகள் உருவாகும். ஏற்கனவே காதல் உறவில் இருப்பவர்களுக்கு வெற்றி கிடைக்கும். பிரிந்து சென்றவர்கள் மீண்டும் சேர வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் சுபகாரியங்கள் நடக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, இந்த வாரம் சுமாரான பலன்கள் உண்டு. நீங்கள் எவ்வளவு உழைத்தாலும், மற்றவர்களே பெயர் வாங்குவார்கள். வேலையில் கவனம் செலுத்துவது மிகவும் அவசியம். வேலையை விட்டு வெளியேற நேரிடலாம் என்பதால் நிதானமாக இருங்கள். மற்றவர்களை நம்பாமல், உங்கள் வேலையில் மட்டும் கவனம் செலுத்துங்கள். அசையா சொத்துக்களை வாங்க வாய்ப்புகள் உண்டு. உற்பத்தி சார்ந்த தொழில்களில் இருப்பவர்களுக்கு நல்ல லாபம் கிடைக்கும். துர்கையையும் பைரவரையும் வழிபடுங்கள்.

Updated On 26 Aug 2025 10:44 AM IST
ராணி

ராணி

Next Story