2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசியில் கேதுவும் சுக்கிரனும் இருப்பதால் மகிழ்ச்சியும், பிரச்சனையும் கலந்த வாரமாக இது இருக்கும். இரண்டாம் இடத்தில் சூரியனும் செவ்வாயும் இருப்பதால் பேச்சில் கவனம் தேவை. தேவையற்ற விஷயங்களில் தலையிடுவதைத் தவிர்ப்பது நல்லது. இந்த வாரம் அமைதியாக இருங்கள். சொந்தத் தொழில் சிறப்பாக இருக்காது. யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம், பணம் திரும்ப வர வாய்ப்புகள் குறைவு. கூட்டாளி தொழில் செய்தால், அவர் லாபம் அடைவார், நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். திருமண வாழ்க்கை மகிழ்ச்சிகரமாக இருக்கும். குழந்தைகளால் மகிழ்ச்சி உண்டாகும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு சிகிச்சைகள் வெற்றி பெறும். இருந்தும் வேலையில் கவனம் தேவை, வேலையில் நிறைய நெருக்கடிகள் இருக்கும். வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். பதவி உயர்வு, சம்பள உயர்வு ஆகியவற்றை பெரிய அளவில் எதிர்பார்க்க வேண்டாம். உங்கள் உழைப்பு அங்கீகரிக்கப்படாமல் போகலாம். வேலை இழப்புக்கான வாய்ப்பும் உண்டு. அதேவேளை நாள்பட்ட நோய்கள் குறையும். கடன் சுமை குறையும். எதிர்பாராத ஆலய தரிசனங்கள் கிடைக்கும். இந்த வாரம் நீங்கள் ஆஞ்சநேயர் மற்றும் நரசிம்மரை வழிபடுவது நல்லது.

Updated On 16 Sept 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story