2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உங்கள் வருமானம் மற்றும் சம்பாத்தியம் நன்றாக இருக்கும். உங்கள் முயற்சிகள் அனைத்தும் வெற்றியை நோக்கிச் செல்லும். நீங்கள் என்ன நினைக்கிறீர்களோ, அது நடப்பதற்கான வாய்ப்புகள் அதிகம். உங்கள் குறிக்கோள்களை அடைவதற்கான சூழல் உருவாகும். உங்களை பெரிய அளவில் மேம்படுத்திக் கொள்வதற்கான வாய்ப்புகளும், காலகட்டங்களும் உள்ளன. உங்களுக்கு தைரியமும், தன்னம்பிக்கையும் அதிகரிக்கும். நீங்கள் நம்பும் நபர்கள் உங்களுக்கு நேர்மையாகவும், உண்மையாகவும் இருப்பார்கள். இறைவன் உங்களுக்குத் துணையாக இருப்பார். எதிர்பாராத சுற்றுலா அல்லது பயணம் செல்ல நேரிடலாம். குடும்பத்தில் சுப காரியங்கள் நடப்பதற்கான வாய்ப்புகள் உண்டு. திருமணம் அல்லது குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. குழந்தைகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். வேலைவாய்ப்பில் கவனம் தேவை. வேலையை விட்டு வெளியேறவோ, வெளியேற்றப்படவோ வாய்ப்புகள் அதிகம். ஆனால், உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். வியாபாரத்தில் நல்ல லாபம் கிடைக்கும். எதிர்பாராத பணவரவு உண்டாகும். உங்கள் கௌரவம், அந்தஸ்து, புகழ், செல்வம், செல்வாக்கு பாதுகாக்கப்படும். காதல் வாய்ப்புகள் ஏற்படும். சொத்து விற்பனை செய்ய முயற்சிப்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உள்ளது. உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. இந்த வாரம் நீங்கள் பைரவர் மற்றும் ஆஞ்சநேயரை வழிபடுவது நல்லது.
