2023, ஆகஸ்ட் 1 முதல் 7- ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஆஞ்சநேயா.

இந்த வாரம் அற்புதமான வாரமாக இருக்கும். உங்கள் பணியிடத்துக்கு உங்கள் குடும்பத்தினரை அழைத்துச் செல்வதால் ஏற்படும் தாக்கம் மிக நன்றாக இருக்கும். 11 ஆம் இடத்தில் மூன்று கிரகங்களின் சேர்க்கை இருப்பதால் பணவரவு நன்றாக இருக்கும். மனைவி வழியில் வருமானம் கிடைக்கும். சுக்கிரன் 7 ஆம் தேதிக்கு பிறகு மாறுவதால் உங்கள் வேலையில் நிறைய நல்ல மாற்றங்கள் நடைபெறும். இந்த வாரம் 5 மற்றும் 7 ஆம் தேதிகளில் மட்டும் சிறிது சுணக்கம் இருக்கும். இந்த வாரமானது வாய்ப்புகள் நிறைந்த சாதகமான வாரமாக இருக்கும்.

Updated On 1 Aug 2023 10:58 AM GMT
ராணி

ராணி

Next Story