2023, செப்டம்பர் 26 முதல் அக்டோபர் 2-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிடர் ஜோதிட வித்யாபதி எம். ஆர். கருணாகரன்

லாபத்தில் கவனத்துடன் செயல்பட வேண்டும். பங்குச்சந்தை, பொருளாதாரம் மற்றும் முதலீட்டில் கவனம் தேவை. குழப்பம் மற்றும் மன அழுத்தம் இருக்கும். பிரயாணங்களில் அசதி ஏற்படும். முயற்சிகளில் சற்று தாமதமும், உடல்நல குறைபாடும் ஏற்படும். 29, 30 தேதிகளில் சாதகமான பலன்கள் ஏற்படும். குடும்பம், நண்பர்கள் மற்றும் கூட்டுத்தொழிலில் அதீத நற்பலன்கள் கிட்டும். 1, 2 தேதிகளில் ஆன்மிகம் சார்ந்த விஷயங்களில் நற்பலனும், வெளிநாட்டு நபர்களால் போட்டி, பொறாமையும், கணவன் - மனைவியிடையே கருத்து வேறுபாடும் ஏற்பட வாய்ப்பிருக்கிறது. மஞ்சள் நிறத்தை பயன்படுத்தினால் நல்ல பலன் கிடைக்கும்.

Updated On 26 Sept 2023 10:48 AM IST
ராணி

ராணி

Next Story