2024 மார்ச் 12-ஆம் தேதி முதல் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத சுற்றுலா மற்றும் வெளியூர் பயணம் இருக்கும். உங்களது வீட்டிற்கு விருந்தினர்கள் வந்து செல்வார்கள். வேலையில் இருந்து விடுப்பு எடுத்து மகிழ்வீர்கள். வருமானம் இருந்தாலும் அதற்கு ஏற்ற செலவுகளையும் செய்வீர்கள். வேலை தேடுபவர்களுக்கு அதற்கு ஏற்ற பணி கிடைக்கும். நீங்கள் எடுக்கும் முயற்சிகள் வெற்றி அடைவது போல் இருந்தாலும் நிறைய தடைகள் ஏற்படும். அதனால் தேவையில்லாத முயற்சிகள் ஏதும் வேண்டாம். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ் மற்றும் ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் அடக்கி வாசிப்பது நல்லது. கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம், புகழ் இருக்கிறது. அதிலும் உற்பத்தி சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. சொந்த தொழிலை பொறுத்தவரையில் பெரிய அளவில் லாபம் இல்லை. திருமண வாழ்க்கையில் உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. விவாகரத்திற்கு விண்ணப்பித்திருந்தால் தாமதம் ஆகும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சியை கொடுக்கும். முறிந்துபோன காதல் மீண்டும் சேர வாய்ப்புள்ளது. சிவன் மற்றும் துர்க்கையை வழிபடுவது நன்மையை தரும்.

Updated On 11 March 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story