2024 ஏப்ரல் 2-ஆம் தேதி முதல் ஏப்ரல் 8-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உங்கள் எதிரிகள் யாராக இருந்தாலும் அவர்களை வெற்றி கொள்வீர்கள். வழக்குகள் இருந்தால் ஜெயிப்பீர்கள். ஏதாவது ஒன்றிற்கு போட்டித்தேர்வுகள் எழுதியிருந்தால் அதில் வெற்றி பெற்று தேர்வாவீர்கள். வேலையில் எந்தவித பிரச்சினையும் இல்லை. வருமானங்கள், சம்பாத்தியங்கள் இருந்துகொண்டே இருக்கும். புதிய முயற்சிகள் செய்து வெற்றி பெறவில்லையே என்று நினைக்க வேண்டாம். தொடர்ந்து முயற்சி செய்யுங்கள் வெற்றி பெறுவீர்கள். எதிர்பாராத பயணம் உங்களுக்கு மகிழ்ச்சி, சந்தோசத்தை கொடுக்கும். உங்களுடைய சகோதர - சகோதரிகளால் நன்மை, நெருங்கிய உறவுகளால் ஒருபுறம் பிரச்சினை, இன்னொருபுறம் நன்மை ஏற்படும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், டிரேடிங், ஆன்லைன் பிசினஸ் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் பெரிய அளவில் இல்லாமல், சுமாரான அளவிலேயே முதலீடு செய்யுங்கள். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. அந்த காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடிய வாய்ப்புள்ளது. சொந்த தொழில் சுமாராக உள்ளது. இரண்டாவது திருமணத்திற்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யலாம். பாஸ்போர்ட், விசா வருவதில் தடைகள் ஏற்படும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, அந்நியமொழி பேசும் நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். குறிப்பாக ஆண் நண்பர்களால் நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் முருகனை வழிபடுவது சிறந்தது.

Updated On 1 April 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story