2025 ஜூன் 17-ஆம் தேதி முதல் 2025 ஜூன் 23-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் தொழில் சிறப்பாக இருக்கும். பணப்புழக்கம் சீராக இருக்கும். எதிர்பார்த்த லாபம் கிடைக்கும். வியாபாரத்தில் பங்குதாரர்கள் லாபம் அடைவார்கள். குடும்ப வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், பிரிந்தவர்கள் ஒன்று சேரவும் வாய்ப்புள்ளது. எதிர்பாராத பயணங்கள் உங்கள் வாழ்க்கையில் முன்னேற்றத்தைத் தரும். உங்களை நம்பியவர்கள் உண்மையாகவும் நேர்மையாகவும் இருப்பார்கள். எதிர்பாராத நன்மைகள் ஏற்படும். புதிய வாய்ப்புகள் உங்களை மேம்படுத்த உதவும். குடும்பத்தில் சுப காரியங்கள் நடக்கும். குழந்தை பாக்கியம் இல்லாதவர்களுக்கு அதற்கான வாய்ப்புகள் உண்டு. பணியிடத்தில் சற்று கவனமாக இருங்கள். ஒருவித தடுமாற்றம் இருந்தாலும் வேலை இருக்கும். இரண்டாம் திருமணம் முயற்சிப்பவர்களுக்கு நல்ல காலம். ஏற்றுமதி, இறக்குமதி தொழிலில் இருப்பவர்களுக்கு ஓரளவு வருமானம் வரும். உங்களுடைய ஆண் நண்பர்களால் உங்களுக்கு நல்லது நடக்கும். குறிப்பாக மூத்த சகோதரர்களால் நன்மை நடக்க வாய்ப்பு அதிகம் உள்ளது. இந்த வாரத்தில் சனி பகவானையும், ஆஞ்சநேயரையும் வழிபடுவது நன்மை பயக்கும்.

Updated On 17 Jun 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story