2025 ஜூலை 15-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 21-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் ராசிநாதன் சுக்கிரன் எட்டில் இருந்தாலும், அவர் பெற்ற நட்சத்திர சாரம் சிறப்பாக இருப்பதால், கடின உழைப்பின் மூலம்தான் மகிழ்ச்சியும் சந்தோஷமும் கிடைக்கும். 8-ல் சுக்கிரன் இருப்பதால் நிறைய போராட்டங்கள், பிரச்சனைகள், மனவருத்தங்களைச் சந்தித்துதான் ஒரு காரியத்தை முடிக்க வேண்டியிருக்கும். கணவன்-மனைவிக்குள் சின்ன சின்ன கருத்து வேறுபாடுகள், சண்டைகள் ஏற்படலாம். வியாபாரத்தில் முதலீடுகளைக் கவனமாகச் செய்யுங்கள். பங்குதாரர்களுடன் வியாபாரம் செய்தால், அவர்கள் லாபம் அடைவார்கள் அல்லது அவர்களுக்காக நீங்கள் உழைக்க வேண்டியிருக்கும். உறவுகளால் நன்மை, மகிழ்ச்சி, சந்தோஷம் கிடைக்கும். பிரிந்த உறவுகள் ஒன்று சேரும் வாய்ப்பு உண்டு. பங்குச்சந்தை, லாட்டரி போன்றவற்றில் முதலீடு செய்பவர்கள் கவனமாக இருங்கள், சாதகமாகத் தோன்றினாலும், பலன் சாதாரணமாகவே இருக்கும். தேவையற்ற குழப்பங்கள், சிந்தனைகளைத் தவிர்க்கவும். சுறுசுறுப்பாக இருங்கள். உங்களின் மூன்றாம் இடத்தை குருவும் சனியும் பார்ப்பதால், எவ்வளவு முயற்சி எடுக்கிறீர்களோ அவ்வளவு வெற்றி கிடைக்கும். கடினமாக உழையுங்கள். சனி பார்ப்பதால் எந்த விஷயத்தையும் ஒத்திப்போடாதீர்கள். வேகமாகச் செயல்படுங்கள். ஐந்தாம் இடத்தில் ராகுவும் குருவும் இருப்பதால் அரசியலில் உள்ளவர்களுக்குப் புகழும் அந்தஸ்தும் கிடைக்கும். விளையாட்டில் உள்ளவர்களுக்கு நிறைய முன்னேற்றங்கள் ஏற்படும். உடல் ஆரோக்கியத்தில் மிகுந்த கவனம் தேவை. அறுவை சிகிச்சை செய்ய நினைப்பவர்கள் இந்த வாரம் செய்யலாம். பெரிய கடன்கள் உள்ளவர்கள் ஆரோக்கியத்தைப் பற்றி கவலைப்பட வேண்டாம். உங்கள் அந்தஸ்து, புகழ் அதிகரிக்கும். பெண் தெய்வங்களையும் விநாயகரையும் வழிபடுங்கள்.
