2025 ஜூலை 22-ஆம் தேதி முதல் 2025 ஜூலை 28-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் நிலுவையில் உள்ள பணம் அல்லது ஓய்வூதியம், பி.எஃப்., கிராஜுவிட்டி, இன்சூரன்ஸ் பணம் போன்றவை கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டாலும், வர வாய்ப்புள்ளது. மனைவியின் மூலம் பணம் வர வாய்ப்பு உண்டு. தொழில் நன்றாக இருக்கும். சுயதொழில் செய்பவர்கள் எதிர்பார்த்த லாபத்தையும், வருமானத்தையும் ஈட்டுவார்கள். கூட்டாளி தொழில் செய்பவர்களுக்கு திருப்தியின்மை இருக்கும். கூட்டாளியை அனுசரித்துச் செல்லுங்கள். புதிய முயற்சிகளில் பெரிய அளவில் வெற்றி இருக்காது. எதிர்பாராத பயணங்கள் மகிழ்ச்சியையும் நன்மையையும் தரும். மூன்றாம் இடத்தை குருவும் சனியும் பார்ப்பதால் சோம்பலைத் தவிர்த்து சுறுசுறுப்பாக இருங்கள். ராகு குருவுடன் ஐந்தாம் இடத்தில் இருப்பதால் பங்குச்சந்தை, லாட்டரி, ஆன்லைன் வணிகம், கிரிப்டோ கரன்சி போன்ற யூக வணிகங்களில் முதலீடு செய்ய வேண்டாம். கலைத்துறையினருக்கு வருமானம் சுமாராக இருக்கும். வேலையில் கவனம் தேவை. வேலையை விட்டு வெளியேறும் அல்லது வெளியேற்றப்படும் சூழ்நிலைகள் வரலாம். வேலையைப் பற்றிய பயம் இருக்கும். நீண்ட விடுப்பு எடுக்கவோ அல்லது விஆர்எஸ் எடுக்கவோ வாய்ப்புள்ளது. உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு பெயர் வாங்கித் தரும். உயர் அதிகாரிகளும், சக ஊழியர்களும் இந்த வாரம் உங்களுக்கு ஆதரவாக இருக்க மாட்டார்கள். மகாலட்சுமியையும், சிவனோடு கூடிய அம்பாளையும் வழிபடுங்கள்.

Updated On 22 July 2025 12:04 AM IST
ராணி

ராணி

Next Story