2025 ஆகஸ்ட் 05-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 11-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் எதிர்பாராத மகிழ்ச்சி உண்டாகலாம். 6-ம் இடத்தில் சனி பகவான் வக்ர கதியில் இருப்பதால் வேலைவாய்ப்பில் பிரச்சனை இல்லை. ஆனால் உடல்ரீதியான பாதிப்புகள் ஏற்படலாம். கடன் தொல்லைகள் அதிகரிக்க வாய்ப்பு உண்டு, ஏனெனில் சனி பகவான் எட்டாம் இடத்தை பார்க்கிறார். தேவையற்ற மன வருத்தங்கள், குழப்பங்கள் ஏற்படலாம். எல்லா விஷயங்களிலும் நிதானத்துடன் செயல்படுங்கள். மற்றவர்களுடன் அனுசரித்துச் செல்லுங்கள். அவசரத் தேவை இருந்தால் மட்டுமே கடன் வாங்குங்கள், இல்லையெனில் எதிர்காலத்தில் கடனை அடைப்பதில் சிக்கல்கள் ஏற்படலாம். மேல்படிப்பு அல்லது உயர்கல்வி படிக்கலாம். ஏற்றுமதி, இறக்குமதி செய்பவர்களுக்கு வரவேண்டிய பணம் கிடைக்க வாய்ப்பு உண்டு. நல்ல நட்பு வட்டாரம் உருவாகும். அந்நிய மொழி பேசும் நண்பர்களால் உதவி கிடைக்கும். மூத்த சகோதரரால் வாழ்க்கையில் முன்னேற்றம் ஏற்படும். வியாபாரம் நன்றாக இருக்கும். தொழிலதிபர்கள் மற்றும் பெரிய வணிகர்களுக்கு நல்ல வருமானம் உண்டு. உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும், ஆனால் சோம்பேறித்தனத்தை தவிர்த்து சுறுசுறுப்பாகவும், சுயமாகவும் இருங்கள். எந்த விஷயத்தையும் யோசித்து செயல்படுங்கள், ஒத்திவைக்காதீர்கள். முருகன் மற்றும் காளி தேவியை வழிபடுவது நல்லது.

Updated On 5 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story