2025 ஆகஸ்ட் 12-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
இந்த வாரம் உயர்கல்விக்கான வாய்ப்புகள் உண்டு. வெளிநாட்டிலிருந்து வரவேண்டிய பணம் தவணை முறையில் கைக்கு வரும். வேலையில், நிறுவனம் மாற முயற்சி செய்பவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. ஆனால், வேலையில் மிகவும் கவனம் தேவை. பணி நீக்கத்திற்கான வாய்ப்புகளும் இருக்கின்றன. பணப்புழக்கம் சீராக இருந்தாலும், செலவுகள் பெரிய அளவில் இருக்கும். தேவையில்லாத மனக்குழப்பங்களைத் தவிர்த்து, நம்பிக்கை வைத்திருங்கள். விவசாயம் மற்றும் உற்பத்தித் துறையினருக்கு இந்த வாரம் பெரிய லாபம் இருக்காது. உற்பத்திக்கு ஏற்ப விற்பனை இருந்தாலும், லாபம் குறைவாக இருக்கும். யூக வணிகத்தில் அதாவது ஷேர், ரேஸ், லாட்டரி போன்றவற்றில் முதலீடுகளைத் தவிர்ப்பது நல்லது. தேவையில்லாத விஷயங்களில் தலையிடாமல் இருப்பது உங்களுக்குப் பிரச்சனைகளைத் தவிர்க்க உதவும். வியாபாரம் சுமாராக இருக்கும். கணவன்-மனைவி உறவில் கருத்து வேறுபாடுகள் ஏற்பட வாய்ப்பு உண்டு. எதிர்பாராத பயணங்களால் ஓரளவு நன்மை உண்டு. மூத்த சகோதரர்கள் மற்றும் எதிர்பாராத நட்புகளால் உங்களுக்கு உதவி கிடைக்கும். முருகன் மற்றும் காளியை வழிபடுவது உங்களுக்கு நன்மைகளைத் தரும்.
