2025 ஆகஸ்ட் 19-ஆம் தேதி முதல் 2025 ஆகஸ்ட் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் எட்டில் இருப்பதால், தேவையற்ற பிரச்சனைகளில் தலையிடாமல் இருப்பது நல்லது. ஒரு கடனை அடைக்க மற்றொரு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலை உருவாகலாம். தந்தையின் அன்பு, ஆதரவு கிடைப்பதில் தாமதம் அல்லது அவருடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. நிதி நிலைமையைபொறுத்தவரை வங்கியில் பண இருப்பு நன்றாக இருக்கும். பேச்சை தொழிலாக கொண்டவர்களுக்கு அதன் மூலம் வருமானம் உண்டு. எதிர்பாராத பயணங்கள் ஏற்படும். கல்வி சிறப்பாக இருக்கும். உயர்கல்விக்காக வெளியூர், வெளிநாடு செல்ல வாய்ப்புகள் உண்டு. சனி ஆறாம் இடத்தில் இருப்பதால் வருமானம், சம்பாத்தியம் இருக்கும். ஆனால், வேலையில் திருப்தியின்மை இருக்கும். வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல லாபம், வருமானம் உண்டு. சொந்தமாக அல்லது பங்குதாரர்களுடன் வியாபாரம் செய்பவர்களுக்கு நல்ல வருமானம் கிடைக்கும். திருமண வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு புகழ் இருக்கும், ஆனால் வருமானம் சுமாராக இருக்கும். ஷேர் மார்க்கெட், ஆன்லைன் வியாபாரம் போன்ற முதலீடுகளில் கவனம் தேவை. உடல் ஆரோக்கியத்தில் அக்கறை செலுத்துவது அவசியம். மகாலட்சுமியையும், பைரவரையும் வழிபடுவது நல்லது.

Updated On 19 Aug 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story