2025 செப்டம்பர் 16-ஆம் தேதி முதல் 2025 செப்டம்பர் 22-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் ராசிநாதன் சுக்கிரன் நல்ல இடத்தில் இருப்பதால் மகிழ்ச்சி உண்டு. வருமானம் அதிகமாக இருந்தாலும், செலவுகளும் அதிகமாக இருக்கும். முடிந்தால் லாபம் தரக்கூடிய விஷயங்களில் முதலீடு செய்யுங்கள். சகோதரர்களுக்காக அல்லது தந்தையருக்காக செலவு செய்ய நேரிடும். உங்கள் முயற்சிகள் வெற்றி பெறும். நீங்கள் நம்பியவர்கள் உங்களுக்கு ஆதரவாக இருப்பார்கள். உங்கள் எண்ணங்கள் வெற்றி அடையும். நீங்கள் எதிர்பார்த்த செய்திகள் தாமதமானாலும் உங்களுக்கு சாதகமாக இருக்கும். நீண்ட அல்லது குறுகிய பயணங்களுக்கான திட்டங்கள் உருவாகும். உங்களை மேம்படுத்திக் கொள்ளவும், புதிய விஷயங்களைக் கற்றுக் கொள்ளவும் வாய்ப்புகள் உண்டு. சமூக வலைத்தளங்கள் மற்றும் தகவல் தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். தேவையற்ற குழப்பங்களை தவிர்த்து தெளிவான முடிவுகளை எடுங்கள். வேலையில் பல மாற்றங்கள் இருக்கும். வேலை, இடம் அல்லது நிறுவனம் மாறுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இருந்தும் வேலையில் நிறைய போராட்டங்கள் இருக்கும். வெளியே சொல்ல முடியாத பிரச்சனைகளை எதிர்கொள்ள நேரிடும். இந்த வாரம் நீங்கள் முருகப்பெருமானையும், சிவபெருமானையும் வழிபடுவது நல்லது.

Updated On 16 Sept 2025 12:00 AM IST
ராணி

ராணி

Next Story