2025 செப்டம்பர் 30-ஆம் தேதி முதல் 2025 அக்டோபேர் 06-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம், உங்கள் பெண் நண்பர்கள் அல்லது மூத்த சகோதர, சகோதரிகள் மூலம் நன்மை, முன்னேற்றம் மற்றும் மகிழ்ச்சி உண்டாகும். வியாபாரம் ஓரளவுக்கு நன்றாக இருக்கும். ஆனால், கூட்டாளிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்தால், அவர்கள் லாபம் அடைவார்கள், நீங்கள் நஷ்டம் அடைய வாய்ப்புள்ளது. உங்கள் திருமண வாழ்க்கையில் சிறுசிறு கருத்து வேறுபாடுகள் ஏற்படும். வேலைவாய்ப்பைப் பொறுத்தவரை, உங்களுக்கு வேலை கிடைக்கும். புதிய வேலை தேடுபவர்களுக்கு நல்ல வாய்ப்புகள் உண்டு. தொழில் அல்லது நிறுவனம் மாற்ற நினைப்பவர்களுக்கு அதற்கான சூழ்நிலைகள் உருவாகும். கடன் கேட்டு விண்ணப்பித்தவர்களுக்கு அது கிடைக்கும். அந்தக் கடன் நீங்கள் விரும்பிய காரியங்களுக்குப் பயன்படும். குழந்தைகளால் மகிழ்ச்சியும், சந்தோஷமும் உண்டாகும். குழந்தை பாக்கியம் எதிர்பார்த்து காத்திருப்பவர்களுக்கு நல்ல செய்தி உண்டு. உங்கள் வியாபாரம் நன்றாக இருக்கும். ஆனால், கூட்டாளிகளுடன் சேர்ந்து வியாபாரம் செய்யும்போது கவனம் தேவை. திடீர் அதிர்ஷ்டம் அல்லது இழப்பு ஏற்பட வாய்ப்புள்ளது. தேவை இல்லாமல் எந்த விஷயத்திலும் தலையிடாதீர்கள். குறிப்பாக அரசாங்க சம்பந்தப்பட்ட விஷயங்களில் கவனமாக இருக்க வேண்டும். யாருக்கும் பெரிய அளவில் ஜாமீன் போட வேண்டாம். இந்த வாரம் நீங்கள் மகாலட்சுமி மற்றும் சிவபெருமானை வழிபடுவது நல்லது.

Updated On 30 Sept 2025 12:01 AM IST
ராணி

ராணி

Next Story