2024 மார்ச் 26-ஆம் தேதி முதல் ஏப்ரல் 1-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

ஏற்கனவே காதலிப்பவர்கள் காதலில் வெற்றி பெறுவீர்கள். புதிதாகவும் காதல் மலர வாய்ப்புள்ளது. குடும்பத்தில் சுபகாரியங்கள், சுபநிகழ்ச்சிகள் நடைபெறுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குழந்தை பாக்கியம், குழந்தைகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் உண்டாகும். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. யாருக்கும் தேவையில்லாமல் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். யாரை தொடர்பு கொள்ள நினைக்கிறீர்களோ அவர்களை இடைத்தரகர்கள் ஏதும் இல்லாமல் தொடர்புகொள்ளுங்கள். வேலையை பொறுத்தவரையில் தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. ஆனால் வருமானங்கள் இருக்கிறது. சொந்த தொழில் நன்றாக உள்ளது. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். நீங்கள் நஷ்டம் அடைவீர்கள். ஏற்றுமதி, இறக்குமதி தொழில் செய்பவர்களுக்கு வராத பணங்கள் வந்து சேரும். பெரிய அளவில் இண்டஸ்ட்ரியல் மற்றும் ஸ்டார்ட் அப் நிறுவனம் தொடங்க நினைப்பவர்கள் கொஞ்சம் பொறுமையாக இருங்கள். உங்கள் மூத்த சகோதர - சகோதரிகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குறிப்பாக ஆண் நண்பர்களால் நற்பலன்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் துர்கையை வழிபடுவது சிறந்தது.

Updated On 25 March 2024 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story