2023, நவம்பர் 28 முதல் டிசம்பர் 4-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

பண வரவு நன்றாக இருக்கும். வருமானத்துக்கு ஏற்ற செலவுகள் ஏற்படும். மனைவிக்கு வைத்தியச் செலவு செய்ய நேரிடும். பேச்சை குறைக்கவும். இல்லாவிட்டால் பிரச்சினைகள் இருக்கிறது. முயற்சிகள் வெற்றிபெற வாய்ப்புகள் குறைவு என்பதால் அனைத்து விஷயங்களிலும் பொறுமையுடனும், நிதானத்துடனும் செயல்படுங்கள். தேவையிருந்தால் மட்டுமே பிரயாணங்கள் செய்யவும். இளைய சகோதர, சகோதரிகள் விஷயத்தில் கவனமாக செயல்படுங்கள். வேலை நன்றாக இருக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவரும் லாபமடைவீர்கள். உயர் கல்வி செய்ய நினைப்பவர்களுக்கு சாதகமான சூழல் அமையும். குழந்தைப்பேறு கிட்டும். குழந்தைகளால் மகிழ்ச்சி இருக்கும். சனி பகவான் மற்றும் நரசிம்மரை வழிபட நற்பலன்கள் ஏற்படும்.

Updated On 27 Nov 2023 6:30 PM GMT
ராணி

ராணி

Next Story