✕
2023, டிசம்பர் 12 முதல் டிசம்பர் 18-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தெய்வ அனுகூலம் வலுவாக இருக்கும். சம்பாத்தியத்திற்கு ஏற்ப செலவீனங்களும் இருக்கும். சுயதொழில் சிறக்கும். பார்ட்னர்ஷிப் பிஸினஸில் இருவரும் லாபமடைவீர்கள். திருமண வாழ்க்கையில் பிரச்சினைகள் விலகி, இருவரும் சந்தோஷமாக இருப்பீர்கள். தேவையற்ற முயற்சிகள், சிந்தனைகள் வேண்டாம். வீடு மாற நினைப்பவர்கள் நிதானமாக செயல்படவேண்டும். வேலை சுமாராக இருக்கும். நீண்ட நாட்களாக வேலை தேடுபவர்களுக்கு வேலை கிடைக்கும். உழைப்புக்கேற்ற ஊதியம் உண்டு. கம்பெனி மாற நினைப்பவர்கள் மாறலாம். எதிர்பாராத தெய்வ தரிசனம் அமைய வாய்ப்புகள் உள்ளன. விநாயகர், பெருமாள் தரிசனம் செய்வது நல்லது.
ராணி
Next Story