2024 பிப்ரவரி 20 முதல் 26-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
நீண்ட நாட்களாக இடம், வீடு, வீட்டு உபயோகப் பொருட்கள், வாகனங்கள் வாங்க நினைப்பவர்களுக்கு அதற்கான சந்தர்ப்பங்கள் வாய்க்கும். உற்பத்தி துறையில் இருப்பவர்களுக்கு விற்பனைக்கு தகுந்த லாபம் கிடைக்கும். கல்வி நன்றாக உள்ளது. அம்மாவின் அன்பு, ஆதரவு பரிபூரணமாக கிடைக்கும். உங்களை அறியாத மகிழ்ச்சி சந்தோஷம் உண்டாகும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அவற்றில் நீங்கள் கலந்துகொள்வீர்கள். குடும்பத்தில் புது வரவு உண்டு. குறிப்பாக குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் விடுப்பு எடுக்க வேண்டிய சூழல் உண்டாகும். வேலை போய்விடுமோ என்ற பயமும் ஏற்படும். அதேநேரம் பணி உயர்வும் கிடைக்கும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு நல்லதொரு ஏற்றம், முன்னேற்றம் இருக்கும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், ட்ரேடிங், டிஜிட்டல் கரன்சி போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்களுக்கு நல்லதொரு வருமானம் கிடைக்கும். திருமண வாழ்க்கையில் திருப்தி இருக்காது. சிவன் மற்றும் விநாயகர் வழிபாட்டை தொடர்ந்து செய்வது நல்லது.
