2024 மார்ச் 5-ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எதிர்பாராத சுற்றுலா பயணம் மேற்கொள்ளுவீர்கள். உங்களை அறியாத மகிழ்ச்சி, சந்தோசம் ஏற்படும். 7-ஆம் தேதிக்கு பிறகு பணியில் நீங்கள் எதிர்பார்க்கும் முன்னேற்றம் இருக்கும். சொந்த தொழில், கூட்டுத் தொழில் எதுவும் தொடங்க வேண்டாம். திருமண வாழ்க்கையும் சுமாராகத்தான் உள்ளது. இடம் அல்லது வீட்டு உபயோகப்பொருட்கள் வாங்க நினைப்பவர்கள் லோன் பெற்று வாங்குவீர்கள். உங்களது ஆசைகள், அபிலாஷைகள் அனைத்தும் பூர்த்தியாகும். பணி மாற்றத்திற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளது. தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுக்க வேண்டாம். வந்து சேரவேண்டிய பணங்கள் தவணை முறையில் வந்து சேர வாய்ப்புகள் இருக்கிறது. புதிய முயற்சிகள் வேண்டாம். இந்த வாரம் விநாயகர் மற்றும் பெருமாள் தலத்தில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபடுவது நல்லது.

Updated On 5 March 2024 2:39 AM GMT
ராணி

ராணி

Next Story