2024 மார்ச் 19-ஆம் தேதி முதல் 25-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் எண்டெர்டெயின்மெண்ட் அதிகமாக இருக்கும். டூர் அல்லது டிராவல் இருக்கும். குடும்பத்தில் சுபகாரியங்கள், சுப நிகழ்ச்சிகள் நடைபெறும். அதற்கு தகுந்த பொருளாதாரம் கிடைக்கும். வேலையில் மாற்றங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது. இந்த வாரம் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம், உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. அதனால் எல்லா விஷயத்திலும் பொறுமையாக இருங்கள். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், டிரேடிங், டிஜிட்டல் கரன்சி போன்ற எதுவாக இருந்தாலும் முதலீடு செய்யுங்கள். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு பரவாயில்லை. உங்களுடைய கல்வி அதுவும் உயர்கல்வி சிறப்பாக உள்ளது. மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, மகிழ்ச்சி, சந்தோஷம் ஏற்படும். அரசாங்க விஷயத்தில் கவனம் செலுத்துங்கள். புதிய முயற்சிகளில் ஒரு பக்கம் வெற்றி, இன்னொரு பக்கம் தடை இருந்துகொண்டே இருக்கும். இருப்பினும் அவற்றில் இருந்து மீண்டு வர யாராவது உதவுவார்கள். தள்ளிப்போன திருமணம் மீண்டும் நடைபெற வாய்ப்புள்ளது. தெய்வ அனுகூலத்தை கூட்டுங்கள். பெருமாள் தலத்தில் இருக்கக்கூடிய கருடாழ்வார் மற்றும் சிவனை வழிபடுவது சிறப்பைத்தரும்.

Updated On 18 March 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story