2024 ஏப்ரல் 9-ஆம் தேதி முதல் ஏப்ரல் 15-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

வேலை பரவாயில்லை. உடன் பணியாற்றுபவர்கள் ஏதோவொரு வகையில் உதவி செய்வார்கள். நீங்கள் சம்பாதிப்பவை, பணமாகவோ, தனமாகவோ இருக்கும். நீண்ட நாட்களாக தங்கம், புதிய ஆடைகள் வாங்க நினைத்தவர்களுக்கு அதற்கான சந்தர்ப்ப சூழ்நிலைகள் உள்ளன. உங்கள் முயற்சிகள் ஓரளவுக்கு வெற்றியடையும். உங்களது எண்ணங்கள், சிந்தனைகள் செயலாக்கம் பெறுவதற்கான வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளது. உறவுகளால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. எதிர்பாராத பயணம், அந்த பயணத்தால் நற்பலன்கள் ஏற்படும். நீண்ட நாட்களாக விற்பனையாகாமல் இருக்கும் சொத்துக்கள் விற்பனையாகும். எந்த ஒரு விஷயத்தையும் செய்வதற்கு முன்பு நன்கு யோசித்து செயல்படுங்கள். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு ஓரளவு லாபகரமாக இருக்கும். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோசத்தை கொடுக்கும். காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். பிரிந்த காதல் மீண்டும் சேரும். வேலையில் நல்ல வருமானம், சம்பாத்தியம் இருந்துகொண்டே இருக்கிறது. உடன் பணியாற்றுபவர்கள், மேல் அதிகாரிகள் உதவி புரிவதற்கான வாய்ப்புகள் உள்ளது. விநாயகர் மற்றும் நவகிரகத்தில் இருக்கக்கூடிய சனி பகவானை வழிபாடு செய்யுங்கள் சிறப்பான வெற்றி கிட்டும்.

Updated On 8 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story