2024 ஏப்ரல் 23-ஆம் தேதி முதல் ஏப்ரல் 29-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழில் முதலீடு செய்வதை தவிருங்கள். லாபம் வருவதுபோல் இருக்கும். ஆனால் வராது. மனைவியினுடைய உடல் ஆரோக்கியத்தில் கவனம் தேவை. வேலையை பொறுத்தவரை நல்ல முன்னேற்றம் உள்ளது. புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலிப்பவர்கள் உங்கள் காதலில் வெற்றி பெறுவீர்கள். நீண்ட நாட்களாக திருமணம் நடக்காதவர்களுக்கு திருமணம் நடைபெறும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், லாட்டரி, போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் செய்யலாம். ஓரளவுக்கு அதன் மூலமாக வருமானம் இருக்கிறது. அதற்காக பெரிய அளவில் கடன் வாங்கி முதலீடு செய்யாதீர்கள். பொருளாதார நிலைகள் பரவாயில்லை. இந்த வாரம் தேவையில்லாத முயற்சிகள் வேண்டாம். நெருங்கிய உறவுகளால் தேவையில்லாத பிரச்சினைகள், போராட்டங்கள், மனக்குழப்பங்கள் இருந்துகொண்டே இருக்கும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. முறிந்த காதல் மீண்டும் சேர்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்ப வராது. உங்கள் நட்பு வட்டம் பெரிய அளவில் விரிவடையும். அவர்களால் மகிழ்ச்சி, சந்தோசம் இருக்கிறது. குறிப்பாக ஆண் நண்பர்களால் நல்லதொரு முன்னேற்றம் அமையும். விநாயகர் மற்றும் முருகனை வழிபாடு செய்வதால் நல்லதொரு ஏற்றம் பெறுவீர்கள்.
