2024 ஏப்ரல் 30-ஆம் தேதி முதல் மே 6-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

இந்த வாரம் உங்கள் சொந்த தொழில் சுமாராக இருக்கும். மணவாழ்க்கையை பொறுத்தவரை கணவன் - மனைவியிடையே பிரிவு, பிரச்சினை, போராட்டம், இருவரில் யாராவது ஒருவருக்கு விரயச் செலவுகள், வைத்தியச் செலவுகள் போன்றவற்றை சந்திக்க வேண்டியுள்ளதால் கவனமாக இருங்கள். வேலையை பொறுத்தவரை நீங்கள் தனித்துவமாக தெரிய வாய்ப்பில்லை. அவசரம், அவசியம் இருந்தால் மட்டுமே கடன் வாங்குங்கள். இல்லாவிட்டால் வாங்காதீர்கள். பொருளாதார நிலைகள் சுமாராகவே இருக்கும். உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபமாக இருக்கும். புதிதாக காதல் மலர வாய்ப்புள்ளது. ஏற்கனவே காதலிப்பவர்களின் காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். மூத்த சகோதர - சகோதரிகளால் நன்மை, நண்பர்களால் மகிழ்ச்சி, சந்தோஷம் இருக்கிறது. குழந்தைகளால் தேவையற்ற செலவினங்கள் அல்லது அவர்களை விட்டு பிரிந்து இருப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன. புதிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு அதற்கு தகுந்த லாபம் கிடைக்கும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. ஆராய்ச்சி படிப்புகளை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். இந்த வாரம் முருகன் மற்றும் விநாயகரை வழிபடுவதன் மூலம் ஏற்றம் முன்னேற்றம் கிடைக்கும்.

Updated On 29 April 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story