2024 மே 7-ஆம் தேதி முதல் மே 13-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
செய்யும் தொழில் சுமாராக இருக்கும். திருமணம் தள்ளிப் போனவர்களுக்கு திருமணம் நடைபெறும். இந்த வாரம் உங்களுடைய பொருளாதாரம் பரவாயில்லாமல் இருக்கும். புதிய முயற்சிகள் எதுவும் வேண்டாம். யாரையும் பெரிதாக நம்பாதீர்கள். வீடு, ஊர் மாற முடியவில்லை, சொத்துக்கள் விற்பனை ஆகவில்லை என்றால் வருத்தப்பட வேண்டாம். தேவையில்லாத குழப்பம், நிம்மதியற்ற சூழல்களை நீங்களே உருவாக்காதீர்கள். பொறுமையாக இருங்கள். தேவையிருந்தால் மற்றவர்களிடம் பேசுங்கள். இல்லை என்றால் கவுண்டர் கொடுக்காதீர்கள். நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக இருக்கும் என்பதால் உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்ஷனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாகவும், சந்தோஷகரமாகவும் இருக்கும். காதல், திருமணத்தில் முடியும். பிரிந்த காதல் மீண்டும் சேரும். ஷேர் மார்க்கெட், லாட்டரி, ரேஸ், டிஜிட்டல் கரன்சி போன்ற எதில் முதலீடு செய்வதாக இருந்தாலும் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். குழந்தைகளால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள், போராட்டங்கள் உண்டு. அவர்களால் தேவையில்லாத மனக் குழப்பங்களும் ஏற்படும். யாருக்கும் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்ப வருவதற்கான வாய்ப்புகள் குறைவு. வேலை பரவாயில்லை. வேலையில் உயர் அதிகாரிகள் மற்றும் உடன் பணியாற்றுபவர்கள் உங்களுக்கு ஒத்துழைப்பு தர மாட்டார்கள். வாரம் முழுவதும் விநாயகர் தரிசனம் குறிப்பாக பிரம்மாவின் வழிபாடு முக்கியம்.
