2024 மே 28-ஆம் தேதி முதல் ஜூன் 03-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எல்லா விஷயத்திலும் கவனமாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். யாருக்கும் தேவையில்லாமல் கடன் வாங்கி கொடுப்பதோ, ஜாமின் போடுவதோ வேண்டாம். அரசாங்கம் தொடர்பான விஷயங்கள் இருந்தால் பொறுமையாகவும், நிதானமாகவும் செயல்படுங்கள். யாருக்கு கடன் கொடுப்பதாக இருந்தாலும் யோசித்து செய்யுங்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. வருமானங்கள் இருந்தாலும் தேவையில்லாத செலவினங்கள் இருக்கிறது. மணவாழ்க்கையில் கணவன் - மனைவிக்குள் கருத்து வேறுபாடுகள், சண்டை சச்சரவுகள், பிரிவு, பிரச்சினை, போராட்டங்கள் அல்லது இரண்டு பேரில் யாராவது ஒருவருக்கு வைத்தியச் செலவுகள் போன்றவை இந்த வாரம் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை கவனமாக இருங்கள். குறிப்பாக உடன் பணியாற்றுபவர்களிடமும், உயர் அதிகாரியிடமும் எச்சரிக்கையாக பேசுங்கள். அவர்கள் சொல்வதை சரியாக செய்யுங்கள். கிரக நிலைகள் சுமாராக இருப்பதால் பெரிய முயற்சிகள் ஏதும் வேண்டாம். அடக்கி வாசியுங்கள். வீடு, இடம் மாற வாய்ப்புகள் இல்லை. சொத்துக்கள் விற்பனை ஆகாமல் இருந்தால் கவலைப்பட வேண்டாம். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு, புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. உங்கள் காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். ஷேர் மார்க்கெட், டிரேடிங், லாட்டரி, ரேஸ், மியூச்சுவல் பெனிஃபிட் போன்றவற்றில் முதலீடு செய்ய நினைப்பவர்கள் யோசித்து முதலீடு செய்யுங்கள். இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் பெருமாளை சேவித்துவிட்டு வாருங்கள் நல்லதே நடக்கும்.

Updated On 28 May 2024 7:13 AM GMT
ராணி

ராணி

Next Story