2024 ஜூன் 04-ஆம் தேதி முதல் ஜூன் 10-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

எடுத்துவைக்கும் ஒவ்வொரு அடியையும் கவனமாக எடுத்து வையுங்கள். அரசாங்கம் தொடர்பான விஷயங்களில் எச்சரிக்கையாக இருங்கள். அறுவை சிகிச்சை செய்ய நினைப்பவர்கள் செய்யுங்கள். குறிப்பாக உடல் ஆரோக்கியத்தில் கவனமாக இருங்கள். யாருக்கும் பணம் கடன் கொடுக்காதீர்கள். அந்த பணம் திரும்பி வருவதற்கான வாய்ப்புகள் இல்லை. இந்த வாரம் உங்கள் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களுடைய கண்முன்பே பணம், பொருள் பறிபோகும் காலம் என்பதால் அவற்றில் கவனம் தேவை. யாருக்கும் சூரிட்டி, செக்கியூரிட்டி கையெழுத்து போடாதீர்கள். யாருடைய பணமாவது உங்கள் கைக்கு வருவதற்கான வாய்ப்புகள் உள்ளன. உறவுகளை பலப்படுத்துங்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது. லாபம் சுமார். காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலரும். பிரிந்த காதல் மீண்டும் சேரும். பெரிய அளவில் ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் போன்ற எதிலும் முதலீடு செய்ய வேண்டாம். ரிட்டன்ஸ் கிடைப்பதில் பெரிய பிரச்சினைகள் இருக்கின்றன. வேலையை பொறுத்தவரை திருப்தியோடு செயல்படுங்கள். வேலையில் கவலை, டென்ஷன், மன அழுத்தம் ஆகியவை இருக்கும். இந்த வாரம் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் பெருமாள் கோயிலில் இருக்கக்கூடிய கருடாழ்வாரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 3 Jun 2024 6:31 PM GMT
ராணி

ராணி

Next Story