2024 ஜூன் 11-ஆம் தேதி முதல் ஜூன் 17-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.
தொழில் பரவாயில்லை. இரண்டாம் திருமணத்திற்கு முயற்சி செய்து கொண்டிருப்பவர்களுக்கு அதற்கான வாய்ப்பு அல்லது அது குறித்த பேச்சுவார்த்தைகள் நடைபெறும். வேலையில் கவனம் செலுத்துங்கள். உங்கள் வேலையில் உடன் பணியாற்றுபவர்களோ அல்லது உயர் அதிகாரிகளோ ஒத்துழைப்பு தர வாய்ப்புகள் இல்லை. வேலையில் பணிச்சுமை, மன அழுத்தம், அதனால் வேலையை விட்டுவிடலாமா என்ற குழப்பம் போன்றவை இருக்கும். ஆனாலும், பொறுமையாகவும், நிதானமாகவும் இருங்கள். பொருளாதாரத்தை பொறுத்தவரை கையில் பணம், தனம் இருப்பதற்கு ஏற்ப செலவினங்களும் இருக்கின்றன. மேற்படிப்பிற்காக வெளிமாநிலம், வெளிநாடு, அப்ராட் போன்ற இடங்களுக்கு முயற்சிப்பவர்கள் முயற்சிக்கலாம். பி.ஆர், கிரீன் கார்டு, சிட்டிசன்ஷிப் விண்ணப்பித்திருந்தால் அவை வருவதற்கான வாய்ப்புகள், சந்தர்ப்பங்கள் உண்டு. புதிய காதல் மலரும். ஏற்கனவே காதலித்தால் அந்த காதல் வெற்றி பெறும். பிரிந்த காதல் மீண்டும் சேரும். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இல்லை. அம்மாவின் உடல் ஆரோக்கியத்தில் கவனம் வையுங்கள். வேலையை பொறுத்தவரை வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். வாய்ப்பிருந்தால் ஏதாவது ஒன்றில் முதலீடு செய்யுங்கள். மூத்த சகோதரர்களால் நன்மை மற்றும் ஆண் நண்பர்களால் நற்பலன்கள் உண்டு. இந்த வாரம் முழுவதும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்மா மற்றும் விநாயகரை வழிபாடு செய்யுங்கள்.
