2024 ஜூன் 18-ஆம் தேதி முதல் ஜூன் 24-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

உயர்கல்வியை தொடர நினைப்பவர்கள் தொடரலாம். வெளிநாட்டு தொடர்புகள் உங்களுக்கு சாதகமாக இருக்கும். அப்பாவால் ஆக வேண்டிய காரியங்கள் கண்டிப்பாக நடக்கும். வேலை நிமித்தமான வெளிநாடு மற்றும் வெளியூர் தொடர்புகள் உங்களுக்கு ஏற்றார்போல் இருக்கிறது. வேலையை பொறுத்தவரை பிரச்சினை இல்லை. லோனுக்கு விண்ணப்பித்திருந்தால் அது கிடைப்பதில் நிறைய பிரச்சினைகள் உள்ளன. போட்டித்தேர்வுகள் எழுதி இந்த வாரம் ரிசல்ட் வந்தால் வெற்றி பெறுவீர்கள். உற்பத்தி சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு புரொடக்சனுக்கு தகுந்த விற்பனை இருக்கிறது, லாபம் இல்லை. விவசாயம் சார்ந்த துறைகளில் இருப்பவர்களுக்கு நல்ல மகசூல் இருக்கிறது. காதல் விஷயங்கள் மகிழ்ச்சி, சந்தோஷத்தை கொடுக்கும். புதிய காதல் மலர வாய்ப்புள்ளது. முறிந்த காதலும் மீண்டும் சேரும். கலைத்துறையில் இருப்பவர்களுக்கு சுமாரான காலம். ஷேர் மார்க்கெட், டிரேடிங், மியூச்சுவல் ஃபண்ட் போன்ற எந்தவிதமான யூக வணிகங்களிலும் முதலீடு செய்ய வேண்டாம். இந்த வாரம் உங்களின் உழைப்பு மற்றவர்களுக்கு லாபம். உங்களுக்கு பிரயோஜனம் இல்லை. உங்களின் பணம், பொருள் மொத்தமாக முடங்கிக்கொள்ளும் அல்லது மாட்டிக்கொள்ளும். அதனால் எல்லாவற்றிலும் நிதானமாக செயல்படுங்கள். ஒன்றிற்கும் மேற்பட்ட தொடர்புகள் வர வாய்ப்புள்ளது. இந்த வாரம் முழுவதும் விநாயகர் மற்றும் சிவன் கோயிலில் இருக்கக்கூடிய பிரம்ம தேவரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 24 Jun 2024 6:43 PM GMT
ராணி

ராணி

Next Story