2024 ஜூன் 25-ஆம் தேதி முதல் ஜூலை 01-ஆம் தேதி வரையிலான ராசிபலன். கணித்து வழங்குபவர் ஜோதிட இமயம் அபிராமி சேகர்.

நீங்கள் செய்யக்கூடிய காரியங்கள் அனைத்தும் வெற்றிடையும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். உயர்கல்வி நன்றாக உள்ளது. அப்பாவின் அன்பு ஆதரவு கிடைக்கும். வேறு அலுவலகம் மாற நினைப்பவர்கள் மாறலாம். வெளிநாட்டு வேலைக்கு முயற்சிப்பவர்கள் முயற்சி செய்யலாம். சொந்த தொழில் பரவாயில்லை. கூட்டுத்தொழிலில் பார்ட்னர் லாபம் அடைவார். வேலையை பொறுத்தவரை உடன் பணியாற்றுபவர்களிடமும், உயர் அதிகாரிகளிடமும் கொஞ்சம் கவனமாக இருங்கள். இல்லையென்றால் வேலையில் பிரச்சினைகள் வரும். தேவையில்லாமல் யாருக்கும் கடன் கொடுப்பதோ, கடன் வாங்குவதோ வேண்டாம். இந்த வாரத்தில் நீங்கள் எடுக்கும் முயற்சிகள் ஓரளவுக்குதான் கைகொடுக்கும் என்பதால் பெரிய அளவில் ஏதும் முயற்சிகள் செய்ய வேண்டாம். எல்லாவிதமான உறவுகளையும் மெயின்டைன் செய்யுங்கள். ஏனென்றால் உறவுகளால் தேவையற்ற மன வருத்தங்கள், பிரச்சினைகள், போராட்டங்கள் உண்டு. நெருங்கிய உறவினர்கள் உங்களை விட்டு பிரிந்து போவதற்கான வாய்ப்புகள் உண்டு. வீடு மாறுவதற்கான வாய்ப்புகள் இந்த வாரத்தில் இல்லை. காதல் விஷயங்கள் மகிழ்ச்சிகரமாக இருக்கும். காதல் வெற்றியடைந்து திருமணத்தில் முடியும். இந்த வாரம் முழுவதும் சிவ தரிசனம் மற்றும் சிவாலயத்தில் இருக்கக்கூடிய பிரம்ம தேவரை வழிபாடு செய்யுங்கள்.

Updated On 25 Jun 2024 3:23 AM GMT
ராணி

ராணி

Next Story